கல்லூரியின் புதிய அதிபராக இன்று பதவியேற்க்கும் கொக்குவில் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான திரு.பஞ்சாட்சரம் கணேசன் அவர்களை கொக்குவில் இந்துக் கல்லூரி சமூகம் சார்பாக வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம்.
இலங்கைத்தீவில் தமிழர் கல்வி மரபுகளையும், விழுமியப் பாரம்பரியங்களையும் தன்னகத்தே கொண்டு தமிழர் தேசத்தின் தன்னிகரில்லா புகழ் பூத்த கல்லூரியாக கொக்குவில் இந்துக் கல்லூரி திகழ்கின்றது. கொக்குவில் இந்துக் கல்லூரியின் அபரிமிதமான வளர்ச்சி என்பது கொக்குவில் இந்துக் கல்லூரியினை நிர்வகித்த புகழ்பூத்த அதிபர்களினதும் கொக்குவில் இந்து கல்லூரித் தாயை நினைவில் சுமந்து பூமி பந்தெங்கும் பரந்து வாழும் கல்லூரி பிள்ளைகளினதும் , ஆசிரியர்களினதும் கூட்டு முயற்ச்சியின் அறுவடையே ஆகும்.
|
அந்த வரிசையில் கல்லூரியின் புதிய அதிபராக எமது கல்லூரியின் பழைய மாணவரான திரு.ப.கணேசன் அவர்கள் இன்று கடமையேற்கின்றார், பல நிர்வாகத்திறமைகளையும் , நீண்டகால கல்வியியல் துறைசார் அனுபங்களையும் தன்னகத்தே கொண்ட கொக்குவில் இந்துவின் பழைய மாணவர் ஒருவர் கல்லூரிக்கு அதிபராக வருவதில் நாம் பெருமைகொள்கின்றோம். கொக்குவில் இந்துக் கல்லூரியின் வளர்ச்சியினை அடுத்த கட்டத்திற்க்கு நகர்த்த வேண்டிய தேவை யாவரும் அறிந்ததே. தங்கள் பணிகளுக்கு உறுதுணையாக உலெகெங்கும் பரந்துவாழும் கொக்குவில் இந்துவின் பிள்ளைகள் இருப்பார்கள் எனும் உறுதி மொழியோடு தங்களை வரவேற்பதில் மகிழ்வடைகின்றோம். |