Kokuvil

கொக்குவில் யாழ்பாணத்தில் 4 கி. மீ (3 மைல்) தொலைவில் அமைந்துள்ள கிராமம். கொக்குவில்; என்ற சொல்லிற்கு இரு அர்தங்கள் உண்டு. கொக்கு என்றால் கரும்பு. இதனால் கொக்குவில் கரும்பு வில் என்று பொருள் படும். கரும்புவில் என்பது மன்மதனினதும் காமாட்சி அம்மனதும் விற்கள். மன்மதன் தன் கரும்பு வில்லில் இருந்து ஐவகை மலர்களை அம்புகளாக எய்ய நாம் காதல்வசப்படுவோம். மன்மதன் எரியுண்ட பின் சிலகாலம் பிரபஞ்சமெங்கும் பிள்ளைகள் பிறக்காமல் இருக்க பார்வதி தேவி சிலகாலம் தான் கையில் கரும்பு வில் எடுத்துplayed நவாலியூர் சோமசுந்தரப் புலவர் தனது பிரபல சிலேடைக் கவிதை யொன்றில் மன்மதனைக் கொக்குவிலான் என்று குறிப்பிடுகின்றார். இதற்காக கொக்குவிலார் எல்லோரும் தம்மை மன்மதனாக எண்ணி செயலில் இறங்க வேண்டாமanmad;.

இரண்டாம் பொருள் வில் என்பது சங்க காலத்தில் குளம் என்று அர்தப்படும். கொக்குவில் கொக்குகள் நிறைந்த குளம் உடைய ஊர் என்று பொருள் படும்.

முடிவிலாதுறை சுன்னாகத்தான்
முந்தித் தாவடி கொக்குவில் மீது வந்து
அடைய ஓர் பெண் கொடிகாமத்தான் அசைத்
ஆனைக்கோட்டை வெளிக்கட்டுடை விட்டாள்
உடுவிலான் வரப் பன்னாலையான் மிக
உருத்தனன் கடம்புற்ற மல்லாகத்தில்
இடைவிடாதனையென்று பலாலிகண்
சோரவந்தனள் ஓர் இளவாலையே.

கொக்குவில் என்ற பெயரில் இலங்கையில் இரு கிராமங்கள் உள்ளன. கொக்குவில் என்ற பெயர் அவ்வளவு இனிமையானது. மற்றக் கொக்குவில் கிழக்கு மாகாணத்தில் இருக்கிறது.

 

http://kokuvil.blogspot.com/

http://WWW.rarjun.tk

காவல் தெய்வங்கள்

மற்ற கிராமங்களுடன் ஒப்பிடுகையில் கொக்குவில் யுத்தத்தால் பெரிதும் பாதிப்டையாவில்லை என்று கூறலாம். இடிந்த கட்டிடங்களை – குண்டுகள் துளைத்த சுவர்களைக் கொக்குவிலில் காண்பது அரிது. இதற்குக் காரணம் கிழக்கே கோணாவளைப் பைரவர் மேற்கே உயரப்புலம் பிள்ளையார் வடக்கே தாவடிப் பி;ள்ளையார் தெற்கே மணியர்பதியார் வடகிழக்கே நந்;தாவில் அம்மன் தென்கிழக்கே நாச்சிமார் அம்மன் வடமேற்கே பத்திரகாளி அம்மன் தென்மேற்கே பராலி அம்மன் ஆகிய தெய்வங்கள் காவல் காப்பதாலா? இவை மட்டுமா 40 ஆண்டுகளுக்கு முன்பே சித்திரத் தேரோடிய மஞ்ஞை வனப்பதி, பொற்பதி நாயகன், கிருபாகர சுப்பிரமணியர், ஐயனார், சூடுகந்தான் ….பட்டியல் நீளும். ஆனாலும் அமைதிப்படை(?) அட்டூழியத்தின் போது பலர் உயிரிழந்தது உண்டு. கொக்குவில் இந்துக் கல்லூரி அகதி முகாமாகியது. கல்லூரி மைதானம் இறந்தோரைப் புதைக்கும் மயானமானது. கொக்குவில் இந்துக் கல்லூரிக் கட்டடமும் சேதப்பட்டது. இது தொடர்பான செய்திகள்:

24 October 1987
Unable to hold proper funeral and burial or cremation due to the prevailing situation the dead bodies were buried in the college playground.
On 10.10 1987, during clashes between the Indian military and the LTTE, due to the Indian military aerial bombing and shelling, more than 1000 people from Kokuvil east and Annaikoddai were living at the Kokuvil Hindu college for 30 days. They flew a white flag at the entrance to the college.

On 24.10.1987, the Indian military convoy that went past Kokuvil Hindu college, began shelling the artillery into the college. 26 people staying in one of the class rooms died on the spot. 14 more people died due to lack of adequate medical care. In total 40 people died due to this direct shelling into a refugee camp. Dean of the School Education, Prof Chandrasekaran, was also killed in this massacre. 80 people were injured.

Unable to hold proper funeral and burial or cremation due to the prevailing situation the dead bodies were buried in the college playground.

For the aerial view of Kokuvil: http://wikimapia.org/2011282/

Manjavanapathy Murugan Temple acquired a new Mancham and made it maiden run on 7th August 2008.

சித்திரத் தேர்கள்

Thanks Vethanathan Senthan for the photos

S. Sivanayagam the veteran journalist wrote about Kokuvil: ‘கொக்குவில், யாழ்ப்பாண நகர எல்லையில் அமைந்திருக்கிறது. அது கிராமமுமில்லை நகரமுமில்லை. சிறு சிறு ஒழுங்கைகள் ஒவ்வொரு வீட்டிலும் போய் முடியும். சைக்கிளை எடுத்துக்கொண்டு ஒழுங்கைகளுக்குள்ளால் சுற்றலாம். நினைத்தவுடன் யாழ்ப்பாண நகரத்திற்குப் போய் வந்து விடலாம். பின்னர் இந்தக் கிராமப் பண்பாட்டுக்குள் வந்து அமைதியாக இருக்கலாம்’ என்று வர்ணிக்கிறார் திரு. சிவநாயகம்.

Vembadi Murugan Temple

பஞ்சாங்கம் தரும் ஊர்

கொக்குவிலிற்கு பெருமை சேர்ப்பது: பாரெங்கும் பாவிக்கப்படும் இரகுநாதர் வாக்கிய பஞ்சாங்கம் கொக்குவிலில் இருந்து வெளிவருவது நாம் எல்லோரும் பெருமைப்பட வேண்டிய விடயம்.

அம்மான் பள்ளிக்கூடம்

கொக்குவிலில் ஒரு கல்விக்கூடம் அம்மான் பள்ளிக்கூடம் என்று கிண்டலாக அழைக்கப்பட்டதை உங்களில் எத்தனை பேர் அறிவீர்கள்? பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத அரச வேலை கிடைக்காத சற்று வயதானவர்கள் ஆரம்ப காலத்தில் படித்தபடியால் கொக்குவிலில் உள்ள பல் தொழில் நுட்பக் கல்லூரிதான் இப்படி கிண்டலாக அழைக்கப்பட்டது. ஆரம்பத்தில் கனிட்;ட தொழில் நுட்பக் கல்லூரியாகத் தொடங்கி பின்னர் பல் தொழில் நுட்பக் கல்லூரியாய வளர்ந்து கொக்குவிலிற்கு பெருமை சேர்ப்பது இது. இன்று இலங்கையின் பலபாகங்களில் இருந்தும் பலத்த போட்டிப் பரீட்சை மூலம் மாணவர்கள் இங்கு அனுமதி பெறுகிறார்கள்.

தலைமகன்

பெற்றோர் இறக்கும் போது மகன் வெளிநாட்டில் இருந்து வருவது இன்று சகஜம். ஆனால் அறுபதுகளின் நடுப்பகுதியில் ஒருவர் அமெரிக்காவில் இருந்து தாயின் ஈமைக் கிரியைக்காக வந்தார் அவருடன் மூன்று உளவுத்துறை அதிகாரிகளும் வந்தார்கள். அவர் ஆங்கிலத்தைத் தவிர வேறு மொழியில் பேசக்கூடாது என்று தடை. அமெரிக்க விஞ்ஞான இரகசியங்கள் பல அவர்வசம் உண்டு. அவற்றைப் பாதுகாக்கத்தான் இந்த ஏற்பாடு. பனிப்போர் காலம் வேறு. அவர்தான் கொக்குவில் இந்துவிலிருந்து முதல் பல்கலைக் கழகம் சென்ற பேராசிரியர் சுந்தரலிங்கம். அமெரிக்காவில் விஞ்ஞானியாக இருந்து ஓய்வு பெற்ற பின் விடுமுறைக்காக திருமலையில் உள்ள உல்லாச விடுதியில் கால் சுகவீனம் உற்ற நிலையில் தங்கியருந்த வேளையில் சுனாமி வந்தபோது மற்றோர் எல்லாம் மேல்மாடிக்கு விரைந்தனர் இவரால் ஓட முடியவில்லை இவரை அணைத்தபடியே இவர் துணைவியாரும் பேரலைக்குப் பலியானார். அவரை நினைத்து நாம் எல்லாரும் பெருமையடைவோமாக.

அவர் பெருமை கூறும் ஊடகக் குறிப்புகள்:

The nucleic acid crystallographic community lost one of its prolific contributors on 26 December 2004 when Muttaiya Sundaralingam, along with his wife Indrani, succumbed to the tsunami in his native country Sri Lanka. Although the duplex structure of DNA was worked out in 1953, stereochemical principles underlying the chemical etiology of nucleic acid structure and conformations began to emerge only later on and Sundaralingam (affectionately called Sunda) made major contributions in this area in a career spanning nearly four decades.

Sunda’s initiation to nucleic acids research began with the crystal structure of 3’CMP with Lyle Jensen, at the University of Washington, Seattle. His penchant for conformational analysis was revealed by the influential article he published in the Journal of the American Chemical Society in 1965 on the possible conformations of five-member furanose rings in nucleic acids, and this was to be the forerunner to many significant contributions that followed. This classic, I suspect, fuelled a number of modelling investigations leading to early understanding of the sugar-pucker-dependence of nucleic acids and their constituents. An improved and finer description of the furanose ring conformation based on the concept of pseudorotation, initially with Cornelius Altona, and later with Eric Westhof and Thiagaraja Rao, delineated several sugar-pucker-dependent correlations with the internal parameters. These paradigms were invaluable in understanding the dynamics of furanose rings in nucleic acids systems studied by X-ray, NMR and computational techniques and continue to be cited extensively .

———-

“He was larger than life,” said John Markley, a professor of biochemistry whose UW career overlapped with Sundaralingam’s during the 1980s.

“He was forceful, articulate and had a loud booming voice,” he said, adding that Sundaralingam would use his cane – which he needed as the result of a childhood battle with polio – and shake it around for emphasis.

———-

கலை நிறை கொக்குவில்

திருமதி சரஸ்வதி பாக்கியராசா, கலைச் செல்வன் சுப்பையா போன்ற கலை வல்லுனர்கள் வாழந்த ஊர் எமது ஊர். அமரர் ஏரம்பு சுப்பையா நிறுவிய கலாபவனம் இன்றும் கலைப்பணி புரிகிறது

Visit: http://kokuvilhindu.blogspot.com/

: click: http://www.kalabhavanam.com/

1983 ஆவணி இனப் படுகொலையின் போது வெலிகடையில் கொல்லப்பட்ட தியாகிகளில் இருவர் கொக்குவிலைச் சேர்நதவர்கள். கொ. இ. க பழைய மாணவர்கள்

Kumarasamy Ganeshalingam and Dr. S. Rajasundaram.

For further details about Dr. S. Rajasundaram:

http://www.tamilnation.org/hundredtamils/rajasundaram.htm

நந்தாவில்Nanthavil.

நந்தாவில் ஒரு அழகிய கிராமம். கோயிலும் குளமும் கொண்ட சிறு கிராமம். நந்தாவில் என்பது வற்றாத குளம் என்று பொருள் படும். சுற்ற உள்ள கிராமங்களை வெள்ள அழிவிலிருந்து பாதுகாக்கும் கிராமம் நந்தாவில். சுற்றுக் கிராமங்களில் இருந்து வரும் வெள்ளம் நந்தாவிலுக்கு வந்து சேரும்படி பூகோள அமைப்பு. வந்து சேரும் வெள்ளம் நந்தாவில் குளத்தில் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து குளப்பிட்டி(?) பள்ளத்தை சேரும். அங்கிருந்து கே. கே. எஸ. வீதியை கடந்து ஓடை வழியாக சிப்பித்தரையைச் சேரும். அங்கிருந்து பட்டு வெளி வயலைகளையும் நிரப்பி பின்னர் பள்ளங்காட்டில் கடலோடு கலக்கும்.
நந்தாவில் குளத்தை சுற்றிவர வயல்களும் தோட்டங்களும் உள்ளன. சிறு மழை பெய்தால் போதும் நந்தாவில் குளம் நிரம்பி சுற்றவர உள்ள வயல்களுக்கும் தோட்டங்களுக்கும் நல்ல விளைச்சலைக் கொடுக்கும். நாட்டில் மற்ற வயல் நிலங்களில் நல்ல விளைச்சல் இருக்காது. நல்ல மழை பெய்தால் நந்தாவில் வெள்ளக்காடாகி விடும். நந்தாவில் வயலும் தோட்டங்களும் அழிந்து விடும். இதையொட்டி நம்மூரில் ஒரு பழமொழி:

நாடு விளைந்தால் நந்தாவில் விளையாது.
நந்தாவில் விளைந்தால் நாடு விளையாது.

Nanthavil Amman Temple

நந்தாவில் அம்மன் தரிசனத்திற்கு: click:http://nanthavil.blogspot.com

தாவடி – Thavady

இயற்கை அழகு நிறைந்தது இனியவர்களைக் கொண்டது தாவடி. இந்த ஒரு வசனமே ஆயிரம் கதைகள் கூறும.;-

Dr. P. Arumugaraasah at Thavady:

Thavady Muniappar Temple:

Thanks to www.thavadyweb.com for these excellant photos

jhtbiag; gw;wp NkYk; mwpaClick: http://www.thavadyweb.com/

75 ஆண்டுகள் பூர்த்தி செய்த இராமகிருஷ்ணா

1938ம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி இராசையா தம்பித்துரை அவர்களின் தனிப்பட்ட முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டு விபுலானந்த அடிகளால் திறந்து வைக்கப்பட்டது கொக்குவில் கிழக்கு இராமகிருஷ்ணா வித்தியாலயம்.